சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநரின் முன்மாதிரியான செயல்!
#SriLanka
#Governor
Mayoorikka
2 years ago
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக இன்று (15) பதவியேற்ற ஜெனரல் நவீன் திஸாநாயக்க, ஆளுநராக தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக பெறும் சம்பளத்தை சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளின் நலனுக்காக வழங்க தீர்மானித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியத்திற்கு, பெறப்படும் மாதாந்த சம்பளத்தை செலுத்துமாறு சப்ரகமுவ பிரதம செயலாளர் மகிந்த எஸ்.விஜேசூரியவிற்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நவநகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நவின் திஸாநாயக்க பதவியேற்றார்.