கோட்டாபயவின் சலுகை தொடர்பில் கிளறியெடுத்த முக்கியப்புள்ளி

#SriLanka #Gotabaya Rajapaksa #Parliament #Lanka4
Kanimoli
2 years ago
கோட்டாபயவின் சலுகை தொடர்பில்  கிளறியெடுத்த முக்கியப்புள்ளி

ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு பதவியை விட்டு விலகியதால், ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான சிறப்புரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என கேட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12, 2016ன் பிரிவு 3(1)ன் கீழ் இந்தத் தகவலைக் கோருகிறார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கியுள்ளதா?

அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புக்காக அரசாங்கம் மாதாந்தம் எவ்வளவு பணம் செலவிடுகிறது? கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஜனாதிபதி அலுவலகத்திடம் முஜுபர் ரஹ்மான் கேட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!