தொலைத்தொடர்பு தொடர்பான 2 மனுக்கள் தள்ளுபடி

#SriLanka #Colombo #Court Order #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
தொலைத்தொடர்பு தொடர்பான 2 மனுக்கள் தள்ளுபடி

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அரசுக்குச் சொந்தமான பங்குகளை மறுசீரமைக்க அமைச்சரவை எடுத்த முடிவின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்யாமலேயே உச்ச நீதிமன்றம் இன்று (15) தள்ளுபடி செய்துள்ளது.

 டெலிகொம் கம்பனியை தனியார் மயமாக்குவதற்கு எதிராக, இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜே. பி. குருசிங்க மற்றும் செயலாளர் எச். கே. ஹெட்டியாராச்சி மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் சமகி சேவக்வா சங்கத்தின் தலைவர் இந்திக பிரியதர்ஷன ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, ​​கடந்த மார்ச் மாதம் டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் கிடைத்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ராஜீவ குணதிலக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

 அத்துடன், நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் வெளியிட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையின் ஊடாக இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

 தொலைத்தொடர்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

 அந்தக் குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை எனத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிரித்தானியா உட்பட உலகின் பல முக்கிய நாடுகளில் தொலைத்தொடர்பு தனியார்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 மனுதாரர்கள் கோரியவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதை தவிர்த்துவிட்டு வேறு நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

 இதனூடாக மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரினார்.

 முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!