நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் மாயம்! போலீசார் விசாரணை
#Cinema
#Actress
#Tamilnews
#ImportantNews
Mani
1 year ago

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் நடித்த ‘குஷி’ படத்திலும் நடனம் ஆடியுள்ளார். தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் அமைந்துள்ளது. தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவரது வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டதால், ஷில்பா ஷெட்டி ஜூஹூ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார். இதனையடுத்து, 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



