மதுபானம் தயாரிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 இலட்சம் பெறுமதியான எத்தனால்
#SriLanka
#Arrest
#Police
#sri lanka tamil news
Prathees
2 years ago
சுமார் 11 இலட்சம் பெறுமதியான 7 பீப்பாய்கள் எத்தனோல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகொடஉயன சந்தியில் உள்ள வீதித் தடுப்பில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு 1,320 லீற்றர் எத்தனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இந்த எத்தனோல் கையிருப்பு வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காக எடுத்துச் செல்வதாக கூறி மதுபானம் தயாரிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.