லங்கா சதோச நிறுவனம் இன்றும் 3 வகையான பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது

#SriLanka #today #Food #Lanka4 #இன்று #உணவு #இலங்கை #லங்கா4
லங்கா சதோச நிறுவனம் இன்றும் 3 வகையான பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது

மக்களின் நன்மை கருதி லங்கா சதோச நிறுவனம் மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களில் விலையை மேலும் குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் வட்டானா பருப்பின் புதிய விலை ரூ.275.00. ஆகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மா 195.00 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 295.00 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

 இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் லங்கா சதொச நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் உன்னத இலக்குடன் மேற்குறிப்பிட்ட மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

 இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ள இந்த மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களையும் இன்று (15) முதல் நாட்டிலுள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களினூடகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!