சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 பில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் அழிப்பு

#Import #Ciggerette #officer
Prasu
2 years ago
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 பில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் அழிப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையில் வியாழக்கிழமை காலை கெரவலப்பிட்டியவில் இந்த சிகரெட்டுக்கள் அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், குறித்த சிகரெட்டுக்கள் அழிக்கப்பட்டமையினால் சுங்கத் திணைக்களத்தினால் அரச வருமானமாக 13 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. 

இதை சுங்கத்துறை செய்யாவிட்டால் 1,300 கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.இதன் காரணமாக குறித்த சிகரெட் தொகையை அழிக்கப்படுகிறது. இவற்றை விற்பனை செய்ய முடியாது. இவற்றின் தரம் தொடர்பில் பொறுப்பு கூற எவரும் கிடையாது. 

சோதனைக்காக எடுக்கப்பட்ட சிகரெட்டுக்கள் முற்றிலும் நிறம் மாறிவிட்டது. இதன் காரணமாக அவை அழிக்கப்படவேண்டும். இந்த சிகரெட்டு தொகைகளை அழிப்பதற்காக இலங்கை புகையிலை நிறுவனத்திடமிருந்து ஒரு சிகரெட் ஒன்றுக்கு 2 ரூபா வீதம் பெறுகிறோம். 

அதாவது அவர்களிடமிருந்து 40 கோடி ரூபா வசூலிக்கப்படும். மூன்று நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் குறித்த நிறுவனங்களிடமிருந்து தலா 25 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 அரசின் வருவாய் பங்களிப்புக்கு இது மிகவும் முக்கியமானது. மறுபுறம் இது சமூகமயமாக்கப்பட்டால் 20 கோடி ரூபா பெறுமதியான தரமற்ற சிகரெட்டுகள் பாவனைக்கு விடப்பட்டிருக்கும். இது சுங்க வரலாற்றில் மிகப்பெரிய சிகரெட்டுகளை அழிக்கும் செயற்பாடு என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!