சூரிச்சில் வாகனம் திருத்துமிடத்தில் தீ விபத்து! மில்லியன் பிராங்குகள் சேதம்
#Police
#Switzerland
#சுவிட்சர்லாந்து
#தீ_விபத்து
#பொலிஸ்
#fire
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago

சுவிட்சர்லாந்து சூரிச் Gächlingen இல் உள்ள ஒரு வாகனம் திருத்துமிடத்தில் பெரும் தீ விபத்தேற்பட்டது. சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர்.
Schaffhausen பொலிசார் வியாழன் காலை ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்த போல், Klettgau பகுதியில் உள்ள பல்வேறு தீயணைப்புப் பிரிவுகளின் அவசர சேவைகள் விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டு வரவும், அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் முடிந்தது.
தீ விபத்திற்கான காரணம் தொடர் விசாரணையில் உள்ளது. சொத்து சேதம் சுமார் ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்று கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 130 பேர் ஈடுபட்டுள்ளனர்.



