மன்னார் - முருங்கன் பகுதியில் படி ரக வாகனம் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசம்
#SriLanka
#Mannar
#Lanka4
#இலங்கை
#தீ_விபத்து
#பொலிஸ்
#fire
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவில் இசைமாலைத்தாழ்வு எனும் பகுதியில் படி ரக வாகமொன்று நேற்று தீ பற்றிக்கொண்டதில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் மயிரிழையில் உயிர்தப்பினர்.
இந்தத் தீ விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி புறப்பட்டு செல்கையிலே ஏற்பட்டுள்ளது.
இந்த படி ரக வாகனம் வியாபார பொருட்களுடன் பயணித்த வேளையில் திடிரென இயந்திரப்பகுதி தீப்பற்றியதாகவும் பின்னர் தாம் அதிலிருந்து வெளியேறி பொருட்களை அகற்றிக்கொண்டதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சிறிது நேரத்தி அந்த படி ரக வாகனம் முற்றாக தீப்பற்றி எரிந்து முடிந்தது. இது குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.