தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: 330 ரூபா வரை உயர்வு
ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
பல வங்கிகளில் டொலரின் விற்பனை மதிப்பு இன்று 330 என்ற எல்லையை எட்டியுள்ளது இதன் சிறப்பு. இதனால் கடந்த மார்ச் 21ம் திகதி முதல் அமெரிக்க டொலரின் மதிப்பு 330ஐ எட்டியது.
இலங்கை வங்கியில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை அதன் விற்பனை விலை 335 மற்றும் 60 சதங்களாக காணப்பட்டது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபா 31 சதமாக காணப்பட்ட அதேவேளை, அதன் விற்பனை விலை 333 ரூபா 97 சதமாக காட்டப்பட்டது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313 ரூபாவாகவும் விற்பனை விலை 328 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன. கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 304 ரூபா 84 சதங்களாக பதிவாகியுள்ளது.
இதன் விற்பனை விலை 328 ரூபாய். செலான் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 299 ரூபாவாகவும், விற்பனை விலை 323 ரூபாவாகவும் காணப்பட்டது.
HNB மற்றும் NDB வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310 ரூபாவை அண்மித்ததுடன் விற்பனை விலை 330 ரூபாவை நெருங்கியது.