வாகன இறக்குமதியே டொலர் நெருக்கடிக்கு பிரதான காரணம்!
#SriLanka
#Dollar
#Import
Mayoorikka
2 years ago
வாகன இறக்குமதியே டொலர் நெருக்கடிக்கு பிரதான காரணம் எனவும் எனவே வாகன இறக்குமதியை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடன் முறையின் ஊடாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாடு இன்னமும் கடன் நெருக்கடியில் இருப்பதால் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதே மிகப் பெரிய சவாலாக உள்ளது என்றார்.
இவ்வாறான நிலையில், கடன் முறை மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் அவதானமாக கருதப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.