இணைய வழி மூலம் கடவுச்சீட்டு: இன்றிலிருந்து ஆரம்பம்
#SriLanka
#Passport
Mayoorikka
2 years ago
கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.