முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் குறைந்தது: இறக்குமதி செலவு அதிகரிப்பு

#SriLanka #Lanka4 #economy
Prathees
2 years ago
முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் குறைந்தது: இறக்குமதி செலவு அதிகரிப்பு

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 5.3 பில்லியன் டொலர்கள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 அந்த காலப்பகுதியில் ஏற்றுமதி மூலம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டிய பின்னணியில் அரசாங்கம் இவ்வளவு பெரிய தொகையை இறக்குமதிக்காக செலவிட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

 இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவினங்களைக் குறைக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே நேற்று ஒரு அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

 அதன்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 303.19 ரூபாவாகவும் விற்பனை விலை 318.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் டொலரின் விற்பனை விலை நேற்று 320 ரூபாவை தாண்டியிருந்தது.

 இது மே 16ஆம் திகதிக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு பதிவான அதிகபட்ச மதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!