மறைந்திருந்த கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி

#SriLanka #Death #Police #Murder #Crime #sri lanka tamil news
Prathees
2 years ago
மறைந்திருந்த கணவன் கத்தியால் குத்தியதில்  மனைவி  சம்பவ இடத்திலேயே  பலி

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாய்க்கலை அலுதோட்டையில் இயங்கி வரும் பேக்கரி உற்பத்தி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பெண்ணொருவர் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

 நேற்று (14ம் தேதி) அதிகாலை 2.00 மணியளவில் இந்த கொலை நடந்துள்ளது. ஹட்டன் வட்டவளை பிரதேசத்தில் வசித்து வந்த சத்தியவேலு நடிகா என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 திருமணத்தின் பின்னர் கணவருடன் ஹட்டன் வட்டவளை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

 இரண்டு வருடங்களுக்கு முன், கணவருடன் வாழ முடியாது என்று கூறி, இந்த பேக்கரி தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு வந்துள்ளார்.

 அதன்பிறகு, அவரது கணவர் பலமுறை போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறியும், அவருடன் வாழ முடியாது எனக் கூறி மறுத்துள்ளார்.

 இதன் காரணமாக அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பேக்கரி அருகே தங்கியிருந்தார்.

 அங்கு, அதிகாலை, 2:00 மணியளவில், பேக்கரிக்கு தேவையான வேலை செய்ய வந்தபோது, ​​மறைந்திருந்த கணவர், மார்புப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தினார்.

 இதில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

 சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!