விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் அடுத்த பருவத்தில் சோளத்தை பயிரிட தீர்மானம்

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4 #famers
Soruban
2 years ago
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் அடுத்த பருவத்தில் சோளத்தை பயிரிட தீர்மானம்

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் அடுத்த பருவத்தில் இலங்கையில் 16,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளத்தை பயிரிட ஒப்புக்கொண்டுள்ளது.

 விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, சிறிய அளவிலான விவசாய-தொழில்முனைவோர் பங்கேற்பு திட்டம் தேவையான ஆதரவை வழங்கும் என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 நாட்டில் கால்நடைத் தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் சோளப் பயிர்ச் செய்கை திட்டத்திற்காக 16,000 ஹெக்டேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதன்படி, அடுத்த பருவத்தில் அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சென்றடையும் வகையில் சோளம் திட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!