உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் : ஐ.நா தலைவர்
உக்ரைன்- ரஷியா போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6-ம் தேதி உடைந்து 18 கியூபிக் கிலோமீட்டர் பரப்பளவு நீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது.
இதை ஆராய்ந்த நார்வே நிலநடுக்கவியலாளர்களும், அமெரிக்க செயற்கைக்கோள்களும் இது குண்டு வைத்து தகர்த்தது போன்று இருப்பதாக தெரிவித்தன.
எனினும், இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.
இதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் என தெரிவித்திருக்கிறார்.