லண்டனில் இந்திய மாணவி கத்தியால் குத்தி கொலை - இருவர் கைது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி கொந்தம் தேஜஸ்வினி (27). இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்கு வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் பகிரப்பட்ட அறையில் தங்கி வசித்து வந்தார்.
இந்நிலையில், தேஜஸ்வினி நேற்று காலை அவரது அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், இவருடன் இவரது தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தேஜஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர 23 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.