சமீபத்திய உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலி
#Death
#Russia
#Missile
#Ukraine
#War
Prasu
2 years ago
ரஷியப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு எதிரான 15-மாத கால போரில் ரஷியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
"ஏழு வீடுகளின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர் என்றும் கிராமடோர்ஸ்க் மற்றும் கான்ஸ்டான்டினோவ்கா நகரங்களில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின" என்றும் டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.