சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

#SriLanka
Kanimoli
2 years ago
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய (COPA) குழுவில் தெரியவந்துள்ளது.

 நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் 26791 கைதிகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் (கோபா குழு) தெரிவித்தார்.

 கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கூறினார். சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 சிறைச்சாலைத் திணைக்களத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் பொதுக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

 சிறைகளில் உள்ள கைதிகளில் 17,502 பேர் விளக்கமறியலில் உள்ள கைதிகள் என்பதும், அவர்களில் 10,470 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. சிறைச்சாலைகள் திணைக்களத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான தற்போதுள்ள சட்டமூலத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு அமைவாக புதிய சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு குழு பரிந்துரைத்த போதிலும் , அந்த பணிகளில் தாமதம் ஏற்படுவது குறித்து அக்குழு அதிருப்தி வௌியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!