ஒன்லைன் கடவுச்சீட்டு விண்ணப்பம்; நாளை முதல் ஆரம்பம்!
இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள ஒன்லைன் (Online) ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள 52 பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேவையான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாள் சேவை மற்றும் சாதாரண சேவைக்கமைய, கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், சாதாரண சேவைக்கு 5000 ரூபாவும், மூன்று நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.