ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி கூட்டம்!
ஆளுங்கட்சி தலைவர்கள் இன்று(14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாகவும், ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியினால் நேற்றுமுன்தினம் (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது.