யானை தாக்கி யாத்திரிகர் உயிரிழப்பு!
#SriLanka
PriyaRam
2 years ago
கதிர்காமம் எசல திருவிழாவில் கலந்துகொள்வதற்காக யால சரணாலயத்தின் ஊடாக பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் குழுவில் வயோதிப பெண்ணொருவர் காட்டு யானை தாக்கி நேற்று (13) மாலை உயிரிழந்தார்.
திருகோணமலை - மாதவிபுரத்தைச் சேர்ந்த நீலகம்மா இராசதுரை (வயது 63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பாளர்களினால் அவரது சடலம் மீட்கப்பட்டு, தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் இருந்து பாத யாத்திரையாக அவரது கணவர் மற்றும் உறவினர்கள் உட்பட யாத்திரிகர் குழு சென்ற நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.