கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!
PriyaRam
2 years ago
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி - கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்து கோணாவில் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குறித்த போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

