பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதி கவனம்!

#SriLanka #Sri Lanka President #Parliament #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதி கவனம்!

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அரசாங்கத்தை நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் அவரது கவனம் சென்றுள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு சமகி ஜன பலவேக கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

 இதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலின் மூலம் அமைக்கப்படும் தமது அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார் என சமகி ஜன பலவேக கட்சியும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

 எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை வழிநடத்த தயாராக இருப்பதாகவும் சமகி ஜன பலவேக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!