இலங்கையில் உணவுப் பஞ்சத்தில் உள்ள மக்கள் குறித்து வெளியான அறிக்கை!
குறைந்த பட்சம் 7.5 மில்லியன் இலங்கையர்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நிபுணர் ஒருவரின் கூற்றை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது.
பொருளாதார மீட்சியின் சமீபத்திய குறிகாட்டிகள் இருந்தபோதிலும், 2022 டிசம்பரில் குறைந்தது 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அத்துகோரலை மேற்கோள்காட்டி அண்மைய ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
உலக உணவுத் திட்டத்தின் (WFP) வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வு அறிக்கை- டிசம்பர் 2022-ன் அடிப்படையில் பேராசிரியர் அத்துகோரலவின் விளக்கத்தின்படி, குறைந்தது 7.5 மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக இருந்தனர் (33 சதவீத குடும்பங்கள்).
எவ்வாறாயினும், சமீபத்திய ஆய்வுகள் வேறுபட்ட அறிக்கையை குறிப்பிடுவதாகக் கூறி பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட ஊடக அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், WFP ஒத்துழைப்புக்கான பங்காளித்துவ செயலகத்தின் (PSWFPC) பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, 7.5 மில்லியன் இலங்கையர்கள் போதிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பல்வேறு தேசிய செய்தித்தாள்களின் கூற்றுக்களை நிராகரித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும் பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் (CFSAM) கண்டுபிடிப்புகளுக்கு முரணானது எனடொக்டர் ஜெயவர்தன மேற்கோள் காட்டிய FAO/WFP பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி, 3.9 மில்லியன் மக்கள் அல்லது 17 சதவீத மக்கள் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இது கடந்த ஆண்டு ஜூன்/ஜூலையில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. "இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 17 சதவீத மக்கள் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் உள்ளனர்.
இது 2022 உடன் ஒப்பிடும்போது ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது" என்று அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 10,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.
இது கடந்த ஆண்டு 66,000 பேராக இருந்ததோடு மேலும், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக உயர்ந்த மட்டமானது தோட்டத் துறையில் (தேயிலை உற்பத்தி) மற்றும் சமுர்த்தி மற்றும் ஊனமுற்றோர் நலன்கள் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இருந்து முக்கிய வருமானத்தைப் பெறும் குடும்பங்கள்.
உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் கட்டுப்படியாகாத தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
அத்தோடு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றால் பிப்ரவரி/மார்ச் 2023 இல் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு பணி (CFSAM) அறிக்கையின் அடிப்படையில் சமீபத்திய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது எனலாம்.