கின்னஸ் சாதனை படைத்துள்ள இலங்கை ராணுவ மருத்துவர்கள்!
#SriLanka
#doctor
#Sri Lankan Army
#WorldRecord
Mayoorikka
2 years ago
இலங்கை இராணுவ மருத்துவர்கள் குழு பெரிய அளவிலான சிறுநீரகக் கல்லை அகற்றி சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.




