ரயில்வே திணைக்களம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
#SriLanka
#Travel
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
களனிவெளி புகையிரத பாதையில் பேஸ்லைன் வீதிக்கும் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையங்களுக்கும் இடையில் 17வது சங்கிலியில் அமைந்துள்ள புகையிரத கடவையின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் 18ம் திகதி அதிகாலை 5 மணி வரை புகையிரத கடவை முற்றாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவை பராமரிப்பு காரணமாக கேகாலை – பொல்கஹவெல வீதி ஜூன் 15 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் ஜூன் 18 ஆம் திகதி காலை 7.00 மணி வரை மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அந்த வீதிகளின் ஊடாக செல்லும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.