இரத்தினபுரி வெள்ள அபாயம்: களுககையை சூழவுள்ள தாழ் நிலப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மழையுடன் கூடிய காலநிலையினால் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதால் களுககனையை சூழவுள்ள தாழ்நில மக்களை அவதானமாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம்(12) காலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதும் ஆங்காங்கே பெய்து வருவதாகவும் இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகல் 7.10 மணி நிலவரப்படி இரத்தினபுரிக்கு அருகிலுள்ள முககமவில் நிறுவப்பட்டுள்ள நீர் மானியின் படி களுககாவின் நீர்மட்டம் 4.44 மீற்றராக உள்ளது.
இது 5.2 மீட்டர் வெள்ள எச்சரிக்கை அளவை நெருங்கியுள்ளது. களுகா மற்றும் களுகா கிளை ஆறுகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என இரத்தினபுரி மாவட்ட செயலகம் நேற்று இரவு அறிவித்தது.
வெ கங்கை, தெனவக்க கங்கை, நிரியெல்ல கங்கை, குரு கங்கை, கலத்துர ஓயா, குக்குலே கங்கை ஆகிய களுகா நதி மற்றும் களுகா நதியின் ஆறு கிளை நதிகளின் நீர் மட்டங்களை இணையத்தின் ஊடாக உடனடியாக அறிந்து கொள்ள முடியும் என இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (13ம் திகதி) காலை வரை களு மற்றும் வே ஆறுகளின் நீர்மட்டம் ஓரளவு குறைந்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு – அம்பிலிபிட்டிய பிரதான வீதிக்கு அண்மித்த கஹவத்த பனவண்ண பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.