அதானி குழுமத்திடமிருந்து இருந்து 500 மெகாவாட் மின்சாரம்: காஞ்சன
#SriLanka
#Power
#Power station
Mayoorikka
2 years ago
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் சூரிய மற்றும் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அடுத்த ஆண்டு (2024) டிசம்பருக்குள் முடிக்க நிறுவனம் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனில் சர்தானா உள்ளிட்ட அதிகாரிகளுடன் திட்டம் மற்றும் அதன் பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்றம் குறித்தும், பிரச்சனைகள், சவால்கள் மற்றும் கட்டுமான நேரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.