10 வருடங்களிற்கு பின்னர் துருக்கிய ஏர்லைன்ஸ்! கொழும்பு இஸ்தான்புல் இடையே சேவை
இலங்கையில் 10 வருட செயற்பாடுகளுக்குப் பின்னர், துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் இஸ்தான்புல் இடையே ஒக்டோபர் மாதம் முதல் நேரடி விமானங்களை இயக்கப் போவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
நேரடி விமானங்கள், இஸ்தான்புல் விமான நிலையத்தில் குறுகிய விமானம் மற்றும் இணைப்பு நேரங்களுடன் உலகின் 129 நாடுகளுடன் விரைவாக இணைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் குளிர்காலமாக இருக்கும் என்பதால், இந்த விமான சேவையின் ஊடாக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.
துருக்கிய எயார்லைன்ஸ் மாலைதீவு ஊடாக தனது விமான இணைப்புகளை பராமரித்து வருகின்றது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அந்த இணைப்புகள் இடைநிறுத்தப்பட்டு இலங்கையுடனான நேரடி விமான இணைப்புகள் ஆரம்பிக்கப்படும்.
இலங்கையை சில வட ஐரோப்பிய நாடுகளுடான் இணைக்கும் செயற்பாட்டை துருக்கிய ஏர்லைன்ஸ் மட்டுமே செய்து வருகின்றது.