ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்குச் செல்வதாகக் கூறி ஸ்பா சென்ற பெண் வைத்தியசாலையில்
ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு ஸ்பா ஒன்றில் சேவை வழங்கச் சென்ற பெண் தனது கணவரின் கூரிய ஆயுதத் தாக்குதலில் படுகாயமடைந்J ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ, ருக்மல்கம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது முதல் திருமணத்தை கைவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும் அவரும் முதல் திருமணத்தை விட்டு பிரிந்தவர் எனவும் இவர்களுக்கு சுமார் 05 வயதுகுழந்தை ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது கணவரின் அனுமதியுடன் கொழும்பு நகரை அண்மித்த பகுதியில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் வேலைக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அவள் வேலைக்குச் செல்லும் நேரம் மற்றும் அவளது நடத்தைக்கு ஏற்ப சில காலமாக இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம், குடும்பத் தகராறு ஏற்பட்டு அதன்படி சந்தேக நபர் பெண்ணின் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
அதன்படி, அவர் ஸ்பாவில் சேவை செய்வதாகத் தெரியவந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரிதாகி, மனைவியைக் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், தாக்கி உள்ளார்.
பின்னர், படுகாயமடைந்த பெண்ணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், வாய் பேசக்கூட முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்படவுள்ளார்.