கெஹலிய மற்றும் லேக் ஹவுஸ் சூடான பிடியில் சிக்கினர் - கோப் குழு
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பரிந்துரையின் பேரில் அசோசியேடட் நியுஸ்பேர்பஸ் ஒப் சிலோன் லிமிடெட் மற்றும் ஊடக அமைச்சுக்கு நியமிக்கப்பட்ட இரண்டு ஆலோசகர்களுக்கு ரூ. 1.8 மில்லியன் மற்றும் ரூ.900,000 வழங்கப்பட்டுள்ளது என கோப் குழு தெரிவித்துள்ளது.
2020 டிசம்பர் 7 ஆம் திகதி அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு ஆலோசகருக்கு ரூ. 1.8 மில்லியன் மற்றும் ஊடக அமைச்சுக்கு விடுவிக்கப்பட்ட மற்றுமொரு ஆலோசகருக்கு ஆலோசனைக் கட்டணமாக ரூ.900,000 நிறுவனத்திடம் எந்த ஆலோசனையும் பெறாமல் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு ஊடக அமைச்சும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையுமே பொறுப்புக்கூற வேண்டுமென கோப் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதோடு
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.