மக்கள் பேரவைகளை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது
மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் (MPC) குழுவொன்று, (PeoplesCouncils) மட்டக்களப்பில் மக்கள் பேரவைகளை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஆதரவைத் திரட்டுவதன் மற்றும் கட்டியெழுப்புவதன் மதிப்பு பற்றிய கலந்துரையாட லானது இன்று காலை பத்து மணிக்கு( 13.06.2024) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது வடக்கு கிழக்கு மக்களின் தனித்துவமான பிரச்சணைகள் தொடர்பிலும் குறிப்பாக மகாவளி அபிவிருத்தி .தொல்லியல் திணைக்கள ஆக்கிருமிப்பு மற்றும் பொதுவான பிரச்சணைகள் பலவும் பேசப்பட்டதுடன் முழு நாட்டிலும் மக்கள் பேரவையை கட்டியெழுப்புதல் தேவையான ஒன்றென இணக்கம் காணப்பட்டது. இக்கலந்துரையாடலில் அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்தமுதலிகே
அருட்தந்தை ஜீவனந்தம் அருட்தந்தை லூக்கா சிவில்ச மூக செயற்பாட்டாளர் ரஜீவன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபா.சிவயோகநாதன் தேசிய காணிகள் உரிமைக்கான அமைப்பின் இணைப்பாளர் மரிசா அரசுசாரா தொண்டுநிறுவணங்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகை தந்த சிங்களமொழியைச் சார்த சிவில்சமூக பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் சக்தி பற்றிய எண்ணம், மற்றும் மக்கள் தங்கள் அன்றாட போராட்டங்கள் மற்றும் குறைகளை அரசியலில் தீவிரமாக பங்கேற்கும் மதிப்பு என்பனவும் ஆராயப்பட்டது.

