அம்பலாங்கொடையில் கைவிடப்பட்ட ஆறு மாத குழந்தை!
#SriLanka
PriyaRam
2 years ago
அம்பலாங்கொடையில் தாயினால் கைவிடப்பட்ட ஆறு மாத குழந்தையும், ஒன்பது வயதுடைய ஆண் குழந்தையும் டுக்-டுக் சாரதியால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு குழந்தைகளையும் பெண்ணொருவர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அவர்களை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், சாரதி தெரிவித்தார். குழந்தைகளின் தாய் திரும்பி வராததால் குழந்தைகளை போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாக டுக்- டுக் சாரதி தெரிவித்தார்.