பாபு இன்சிடியுட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

#SriLanka #Jaffna
PriyaRam
2 years ago
பாபு இன்சிடியுட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

பாபு இன்சிடியுட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) யாழ்ப்பாணம், உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும், பாபு இன்சிடியுட் கராத்தே பாடசாலையின் தலைவருமான சென்சய் சூசைநாதர் யசோதரன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பாரம்பரிய கலை வடிவங்களான கராத்தே, சிலம்பு, நெஞ்சாக் மற்றும் வாள் சுற்றுதல் போன்ற கலைகளின் ஊடாக பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 

சர்வதேச ரீதியில் சிலம்பத்தில் (குளோபல் வேள்ட் றெக்கோட்) சாதனை செய்த மாணவர்களின் கராத்தே நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பட்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அதிகார சபையின் பணிப்பாளர் கந்தையா கருணாகரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் முருகேசு.சிவகுமாரி, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் சிறிமேனன் வினோதினி, யாழ். குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பாபு இன்சிடியுட் கராத்தே சம்மேளனத்தின் முதன்மை ஆசிரியர் புலேந்திரன் மாஸ்ரர், மற்றும் மாணவர், பெற்றோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

images/content-image/2023/06/1686655078.jpg

images/content-image/2023/06/1686655111.jpg

images/content-image/2023/06/1686655149.jpg

images/content-image/2023/06/1686655175.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!