பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; அனுமதி குறித்து விசேட கூட்டம்!

#SriLanka #Kilinochchi
PriyaRam
2 years ago
பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; அனுமதி குறித்து விசேட கூட்டம்!

கிளிநொச்சி, பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி வழங்கும் விசேட கூட்டம் இன்று இடம்பெற்றது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், அதன் முதல் பகுதியாக குறித்த கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது. 

அதானி குழுமத்தின் முதலீட்டில் பூநகரி, கெளதாரிமுனை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி வழங்க மறுத்தது. 

இரண்டு கூட்டங்களில் குறித்த நிலையத்தின் நன்மை, தீமைகள் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்ட பின்னர் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தின் முதல் பகுதி கூட்டம் குறித்த விடயத்தை உள்ளடக்கி இடம்பெற்ற்றது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான MA சுமந்திரன், எஸ் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், அதானி குழுமத்தின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

images/content-image/2023/06/1686651431.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!