கையிருப்பு மருந்துகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்

#SriLanka #Lanka4 #Drug shortage #tablets
Kanimoli
2 years ago
கையிருப்பு மருந்துகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அறுபது வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தற்போதுள்ள கையிருப்புகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று (12) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடினர். அங்கு கையிருப்பில் உள்ள மருந்துகளை விற்பனை செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்குவதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பதினைந்து வகை மருந்துகளின் விலையை பத்து வீதத்தால் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை தயாரித்து சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது. வி

லை குறைக்கப்பட்ட மருந்துகளில் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உடல்வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடங்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!