ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்படுவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை!
ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்படுவதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புத் துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஊகங்களின் அடிப்படையிலானது எனத் தெரிவித்த சமரஜீவ, தேசிய பாதுகாப்பு என்ற சொல்லை ஒரு கோசமாக மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட '101 பேச்சுக்கள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
துறைசார் குழுவின் கொள்கைகளுக்கு முரணான வகையில் நிபுணர் அறிவு உள்ளவர்கள் மூலம் விசாரணை நடத்தாமல் இவ்வாறான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.