ஜனாதிபதியின் கலந்துரையாடலை தவிர்த்த பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று பிற்பகல் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் பலர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிற்கு அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கூடி, ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சந்திப்பில் பங்கேற்பதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் மகிந்தானந்த அளுத்கம தவிசாளர் தவிர்ந்த ஏனைய மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சந்திப்பில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.