டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் இன்று விசாரணை
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராக மியாமி வந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியை விட்டு வெளியேறிய பின்னர் ஜனாதிபதியின் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக மியாமி பெடரல் நீதிமன்றத்தில் 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று (12) தனது தனி விமானம் மூலம் மியாமி வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப் தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார்.
மியாமி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மியாமி மேயர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஜனாதிபதியின் இரகசிய ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.