23 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டது எப்படி: விசாரணை நடத்துமாறு உத்தரவு
#SriLanka
#Colombo
#Police
#Court Order
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
கொழும்பில் உள்ள கட்டிடம் ஒன்றில் பலவந்தமாக பிரவேசித்த 23 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம் மாவத்தையில் உள்ள 09 மாடி கட்டிடத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (12) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் தீர்மானித்தார்.