காங்கேசன்துறையில் சில காணிகள் விடுவிக்கும் சாத்தியம்: தளபாடங்களை பாதுகாக்கும் பொலிஸார்
#SriLanka
Mayoorikka
2 years ago
காங்கேசன்துறை, மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள 30 ஏக்கர் காணிகள் இராணுவத்திடம் இருந்து எதிர்வரும் புதன்கிழமையளவில் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவதரப்பால் உத்தியோகபூர்வமாக காணி கையளிக்கும் நாளினை தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு அறிவிக்கவில்லை என அறியமுடிகிறது. அங்கிருந்து இராணுவத்தினர் தமது தளபாடங்களை அங்கு அகற்றும் பணிகள் இடம்பெறுவருகிறன.
இதேவேளை காணி விடுவிப்பு செய்த பின்னர் அங்குள்ள வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டு மீதி தளபாடங்களை பாதுகாப்பது கட்டாயமாகும் நேற்றைய தினம் இரும்பு எடுப்பது என நுழைந்த சிலர் வீட்டில் பொருத்தப்படுள்ள தளபாடங்களை எடுக்க முயன்றபோது பொலிஸார் கண்டு துரத்தி சென்ற சம்பவம் கூட இடம்பெற்றுள்ளது.
இவ்வாறன நிலையில் பொலிஸ் பாதுகாப்பும் தற்போது அங்கு போடப்பட்டுள்ளது.