அமரகீர்த்தி கொலை சம்பவம்: 42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
#SriLanka
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடா்பில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 42 சந்தேக நபர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றும் உருவாக்கப்பட்டுளள்து.
கடந்த வருடம் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது ,மே மாதம் 9ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
குற்றம் சாட்டப்பட்ட 42 பேரில், 37 பேர் ஏற்கனவே விளக்கமறியலில் உள்ளனர், மேலும் 5 குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.