தளபதியின் “லியோ” படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

#Cinema #Actor #TamilCinema #Vijay #Tamilnews
Mani
2 years ago
தளபதியின் “லியோ” படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “லியோ”. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இவர் 4 நாட்கள் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டென்சில் ஸ்மித் பாலிவுட் படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகிய “டெனட்” திரைப்படத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4