நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா? கொந்தளித்த ஜனாதிபதி!
தொல்பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.
”நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரியைக் கேட்டார்.
தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த நிகழ்வு நடந்தது.
தொல்பொருள் திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காக 270 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்க தாம் திட்டமிடுவதாக உத்தியோகத்தர் ஒருவர் கூறிய போது, அது மஹா விகாரையை விடப் பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டார்.
எதற்காக உங்களுக்கு 270 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது? அது மஹா விகாரையை விடப் பெரியதா? மஹா விகாரை, ஜேதவனாராமய விகாரை, அபயகிரி ஆகிய மூன்றும் சேர்ந்து கூட 100 ஏக்கர் நிலத்தை எடுக்காது,'' என ஜனாதிபதி கூறினார்.