அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு! அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
#SriLanka
#Medicine
Mayoorikka
2 years ago
அத்தியாவசிய மருந்துகளில் 60 மருந்துகளுக்கு மாத்திரமே விலை கட்டுப்பாடு உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் கடந்த காலங்களில் மருந்துகளின் விலை, மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவா் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தற்போது டொலரின் பெறுமதி குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்துள்ளதால், அதன் பலன் நிச்சயமாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் எனவும், அதனை வழங்குவதற்கு உரிய முறைமையை சுகாதார அமைச்சு தயாரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்து இறக்குமதியாளர்கள் தமக்கு விரும்பியவாறு மருந்துகளின் விலையை உயர்த்துவதால், அது தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் மருத்துவா் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளாா்.