தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து!
#SriLanka
#M. K. Stalin
Mayoorikka
2 years ago
கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு,தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்வர் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. அதை நினைவூட்டும் வகையில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக செந்தில் தொண்டமான், தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.