ஈரானில் தந்தையால் பறிபோன 9 வயது சிறுவனின் உயிர்

#Death #GunShoot #Iran #baby
Prasu
2 years ago
ஈரானில் தந்தையால் பறிபோன 9 வயது சிறுவனின் உயிர்

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் தனது தந்தை காரை திருடி சென்றதனால் சிறுவன் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். காரைத் திருடிய பிறகு, அந்த நபர் சிறுவனுடன் ஓட்டிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் “திருடப்பட்ட வாகனத்தை துப்பாக்கியால் சுட்டு” தடுக்க முயன்றனர், ஆனால் சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியுள்ளார. 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிசார் சுடத் தொடங்குவதற்கு முன்னர் அந்த நபருக்கு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபருக்கு கார் திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றப் பதிவுகள் இருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 அந்த சிறுவனை 9 வயது Morteza Delf Zaregani என அடையாளம் காணப்பட்டது. புகாரின்படி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு போலீசார் எந்த எச்சரிக்கையும் விடவில்லை என்று தந்தை குற்றம் சாட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!