பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானத்தால் பரபரப்பு

#India #Flight #Pakistan #Border
Prasu
2 years ago
பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானத்தால் பரபரப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விமான போக்குவரத்து பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரு நாடுகளும் தங்கள் வான்பரப்பை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் இண்டிகோ விமானம் நேற்று இரவு பாகிஸ்தான் வான் எல்லைகுள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி நேற்று இரவு இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. 

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென பாகிஸ்தான் வான்பரப்பிற்குள் நுழைந்தது. இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் வடக்கு லாகூர் வான்பரப்பில் நுழைந்துள்ளது.

 மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளது. பின்னர், மீண்டும் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!