கோழி இறைச்சி,முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
#SriLanka
#Chicken
#Lanka4
Kanimoli
2 years ago
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிகளை இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீன் விலை அதிகரிப்பால் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதனால் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக வர்த்தகர்கள் முறையற்ற இலாபம் ஈட்டுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த வர்த்தக அமைச்சுடன் இணைந்து செயற்பட நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.